மின்வெட்டால் மக்கள் கடுப்பு-தீபாவளி இனாமுக்கு குட்பை சொன்ன மின்வாரிய ஊழியர்கள்
கரூர்: மின்வெட்டால் மக்கள் ஏக கடுப்பில் இருப்பதால் இந்த முறை தீபாவளி இனாம் கேட்க வராமல் கமுக்கமாக இருந்து விட்டனர் மின்சார வாரிய ஊழியர்கள். இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் வியாபாரிகள்.
தீபாவளி பண்டிகையையொட்டி இனாம் கேட்பது என்பது ஒரு சம்பிரதாயமாக மாறி விட்டது. நகராட்சியில் பணிபுரியும் துப்புறவு தொழிலாளர்கள், நகர் நல அதிகாரிகள், அரசு அலுவலகத்தில் பணிபுரியம் தொழிலாளர் நல அலுவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்டபுத்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் போன்ற பலரும் பொது மக்களிடமும், வணிகர்களிடமும் நோட்டு போட்டு வசூலிப்பதைக் காணலாம்.
ஆனால் இந்த பண்டிகையை முன்னிட்டு வழக்கமாக தீபாவளி இனாமுக்கு வரும் மின்சார வாரிய ஊழியர்கள் யாரும் வசூலுக்கு வரவில்லையாம். இதனால் வியாபாரிகள், வர்த்தகர்கள் ஆச்சரியமடைந்தனர்.
ஏன் என்று விசாரித்தபோதுதான் மேட்டர் தெரிந்தது. அதாவது மின்வெட்டால் மக்களும், வியாபாரிகளும், வர்த்தகர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நேரம் போய் இனாம் கொடுங்கள் என்று கேட்டால் சரிப்படாது என்று கருதியே இனாம் கேட்க வரவில்லையாம்.
இதெப்படி இருக்கு...!












Click it and Unblock the Notifications