பெண் தியாகிக்கு முழு ஓய்வூதியம்: கருணாநிதி உத்தரவு
செங்கோட்டை: பெண் சுதந்திரப் போராட்ட தியாகி கோதையம்மாளுக்கு முழு ஓய்வூதியம் வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இந்திய விடுதலை போராட்டத்தில் வீரவாஞ்சியுடன் சேர்ந்து திருநெல்வேலி கலெக்டராக இருந்த ஆஷ் துரையை கொன்ற வழக்கில் முதன்மை குற்றவாளிகளின் பட்டியலில் இடம்பெற்று தூக்கு மேடை வரை சென்றவர் கஸ்பா அழகப்ப பிள்ளை. இவரின் புதல்வி தியாகி கோதையம்மாள் (85).
தியாகி கோதையம்மாள் அவர்கள் சிறுமியாக இருக்கும்போது தனது தகப்பனாருடன் இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றவர். பலமுறை வீட்டு காவலில் இருந்தவர். தனது தகப்பனாருடன் பலமுறை காவல் கைதியாகவும், கைது செய்யப்பட்டு பல துன்பங்களுக்கு ஆளானவர்.
வெள்ளையனே வெளியே இயக்கப் போராட்டத்தின்போது, வெள்ளைக்கார போலீஸ் இவர் வீட்டு பொருட்களை தெருவில் தூக்கி எறிந்தும், இவரை அடித்தும் துன்புறுத்தினர். அடித்த அடியின் தழும்பு தன் முதுகில் உள்ளது என்று கூறினார். வெள்ளைக்கார போலீசின் அட்டுழியம் தாளாது, செங்கல்பட்டு மாவட்டம், வீரவாரம் கிராமத்தில் தலைமறைவு வாழ்வு வாழ்ந்தவர்.
தற்போது தனது வீட்டில் தேவாரம், திருக்குறள் வகுப்புகளை இலவசமாக நடத்தி வருகிறார். தமிழ் தொன்டாற்றியும் வருகிறார். இவருக்கு தமிழக முதல்வர் கருணாநிதி வீரவாஞ்சி தினம்-வீரவாஞ்சியின் நூற்றாண்டு ஆரம்ப தினமான ஜூலை 17-ம் தேதி தியாகி முழு ஓய்வூதியம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக முதலமைசசருக்கு தியாகி கோதையம்மாள் நன்றி தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications