விடிய விடிய சாரல்-குற்றாலம் அருவிகளில் வெள்ள பெருக்கு
Subscribe to Oneindia Tamil

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து குற்றாலத்தில் சீசன் களை கட்டியுள்ளது. அவ்வப்போது சாரல் தூறி வருவதால் குளு குளு சீசன் நிலவுகிறது. நேற்று இரவு குற்றாலத்தில் தொடங்கிய சாரல் மழை விடிய விடிய நீடித்தது. இதனால் மெயின் அருவியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. ஆர்சை தாண்டி தண்ணீர் அதிக அளவில் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் குளிக்க அறிவுறுத்தப்பட்டனர்.
நேற்று காலையும் குற்றாலத்தில் சாரல் தூறிய வண்ணம் இருந்தது. குற்றாலம் ஐந்தருவியிலும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் குற்றாலத்தில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. சீசனை ஓட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications