வாழ்க்கையில் உருப்பட வேண்டுமானால் சினிமா, டிவி சீரியல்களை தவிருங்கள்-கோவை போலீஸ் கமிஷனர்
கோயம்பத்தூர்: மாணவர்கள், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் தமிழ் சினிமாக்களையும், டிவி சீரியல்களையும், கிரிக்கெட் போட்டிகளையும் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திர பாபு கூறியுள்ளார்.
கோவை சங்கரா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியின்போது சைலேந்திர பாபு பேசியதாவது:
வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன; ஆனால் வேலைக்கான தகுதியுள்ளவர்கள் குறைவாகவே உள்ளனர். இந்தியாவில் பட்டப்படிப்பு முடித்து வெளியேறும் மாணவர்களில் 80 சதவீதத்தினர் வேலைக்கான தகுதி இல்லாதவர்களாகவே உள்ளனர்.
கல்வி என்பது படிப்பை மட்டுமல்ல, வாழ்க்கைக்குத் தேவையான திறன்களையும் அளிப்பதாக இருக்க வேண்டும். என்ன படிப்பு படித்தாலும் அப்படிப்பை முடிக்கும் போது அறிவு, திறமை, மனப்பக்குவம் உட்பட நடத்தையில் மாற்றம் வந்திருக்க வேண்டும். மாற்றம் ஏற்படுத்தவில்லை என்றால் முழுமையான அறிவை பெறவில்லை என்று பொருள்.
வேலை கிடைத்தவுடன் பல ஆசிரியர்கள் படிப்பதை நிறுத்திக் கொள்கின்றனர். மாணவர்களை விட, ஆசிரியர்கள்தான் அதிகமாக படிக்க வேண்டும். நிர்வாகவியல் படிப்பு படிக்கும் மாணவனுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு மாணவனும் தலைமை பண்பு திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
சிறந்த தலைமைப் பண்பும், தகவல் தொடர்பு திறனும் இருந்தால் எந்த நிறுவனமும் அதிக சம்பளத்துடன் வேலை வழங்கும். இந்த இரண்டு திறன்களும் இருந்தால் தனியாக தொழில் துவங்கி 1,000 பேருக்கு வேலை வழங்கவும் முடியும். ஒரு ஆசிரியர் சிறந்த தலைமை பண்பு உள்ளவராக இருப்பது முக்கியம்.
மாணவர் மனதில் தலைமை பண்பு திறனை ஆசிரியர் உருவாக்க வேண்டும். தலைவராக விரும்புபவர்கள் முதலில் நல்ல மனிதனாக இருக்க வேண்டும். படிக்கும்போதே ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்ப்பது முக்கியம். வாழ்க்கையில் முன்னேற விரும்பும் மாணவர்கள் தமிழ் சினிமாவை பார்க்காதீர். சிந்திக்கும் திறன் மழுங்கி விடும். திறமை வளராது.
இன்று எவரிடமும் இல்லாத "நேரம்' எனும் பொக்கிஷம், மாணவர்களிடம் மட்டுமே உள்ளது. "டிவி' சீரியல், சினிமா, கிரிக்கெட் மேட்ச் பார்த்து அந்த பொக்கிஷத்தை வீணடிப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என்றார் சைலேந்திர பாபு.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications