சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மண்டல பூஜை
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்த பெற்ற மண்டல பூஜை நாளை நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மிகவும் பிரசித்த பெற்றது. இந்த ஆண்டுக்கான மண்டல கால பூஜைக்காக கடந்த மாதம் 16ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது.
கடந்த 17ம் தேதி முதல் மண்டல காலம் தொடங்கியது. தினமும் ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதனால் கோயில் வருமானமும் கடந்த ஆண்டை விட அதிகரித்து்ள்ளது. இந்நிலையில் 41 நாள் நீண்ட மண்டல காலம் நாளை நிறைவடைகிறது. இதையொட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முலா பார்த்தசாரதி கோயிலில் இருந்து கடந்த 23ம் தேதி ஊர்வலமாக புறப்பட்டது.
இது இன்று பிற்பகல் பம்பையை அடைகிறது. தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு மாலை 6 மணி அளவி்ல் சன்னிதானத்தை அடையும். பின்னர் அவை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். தொடர்ந்து தீபாரதனை நடக்கு்ம்.
பின்னர் இரவு 10 மணி அளவில் நடை சாத்தப்படும். நாளையுடன் இந்தாண்டுக்கான மண்டல காலம் நிறைவடையும். மீண்டும் மகர விளக்கு கால பூஜைக்காக வரும் 30ம் தேதி நடை திறக்கப்படும்.
மண்டல பூஜையை முன்னி்ட்டு சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications