முதியோர்களை துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை-போலீஸ் எச்சரிக்கை
சென்னை: மூத்த குடிமக்களாகிய வயது முதிர்ந்தோரை சித்திரவதை செய்வது, கொடுமைப்படுத்துவது, புறக்கணிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக இன்று சென்னையில் தொடங்கிய மூத்த குடிமக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து கூடுதல் ஆணையர் ஷகீல் அகமது பேசுகையில்,
சென்னையில் முதியவர்களுக்கு எதிராக கொடுமைகள் நடந்ததாக 4 வழக்குகள் பதிவு செய்துள்ளோம். 2007 சட்டப்படி இந்த வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. மேலும் முதியோருக்கு எதிராக கொடுமை நடப்பதாக புகார்கள் வந்தால் குற்றவாளிகளுக்கு 3 மாத ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
சட்டத்திற்கு உட்பட்டு இதுபோன்ற குற்றங்கள் செய்வோரை தண்டித்தாலும் அவர்களாக திருந்தினால்தான் குற்றங்கள் தடுக்கப்படும்.
பொதுமக்கள்-போலீஸ் நல்லுறவை வளர்ப்பதற்காக அக்டோபர் 1-ந்தேதி அன்று சென்னையில் உள்ள 9 போலீஸ் நிலையங்களுக்கு பொதுமக்கள் எந்த நேரத்திலும் செல்லலாம். பள்ளி மாணவ-மாணவிகள் போலீஸ் நிலையங்களுக்கு சென்று போலீஸ்துறை தொடர்பான எந்த கேள்வி களையும் கேட்கலாம். எப்படி வழக்குப்பதிவு செய்கிறார்கள், குற்றங்களை எப்படி தடுப்பது உள்பட அனைத்து சந்தே கங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications