திண்டுக்கல் எவுத்தாளர் கமலவேலனுக்கு பாலசாகித்ய புரஸ்கார் விருது
திண்டுக்கல்: திண்டுக்கல்லைச் சேர்ந்த எழுத்தாளர் மா.கமலவேலன் மத்திய அரசின் பாலசாகித்ய புரஸ்கார் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளியில் இவர் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். தமிழக அரசின் நல்லாசிரியர் விருதினையும் பெற்றுள்ளார்.
1961-ம் ஆண்டு முதல் சிறுவர் நூல்களை எழுதி வருகிறார். கண்ணன், அரும்பு, கோகுலம், சிறுவர்மணி ஆகிய இதழ்களில் குழந்தைகளுக்காக எழுதியுள்ளார்.
சிறுகதை, நாடகம், வாழ்க்கை வரலாறு ஆகிய துறைகளிலும் இவரது பங்களிப்பு உள்ளது. வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள், உரைச் சித்திரங்கள் வழங்கியுள்ளார்.
சாகித்ய அகாதெமி இந்த ஆண்டு முதல் குழந்தைகள் இலக்கியத்துக்காக பாலசாகித்ய புரஸ்கார் விருதை ஏற்படுத்தி உள்ளது. இப்பரிசு பெறும் முதல் தமிழ் எழுத்தாளர் மா.கமலவேலன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் எழுதிய அந்தோணியின் ஆட்டுக்குட்டி என்ற சிறுவர் நூலுக்கு இப்பரிசு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மா.கமலவேலன் தனது இலக்கியப் படைப்புகளுக்காக கோவை லில்லிதேவ சிகாமணி விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.
அறிவொளி இயக்கத்தில் சிறந்த பணிக்காக மால்கம் ஆதிசேஷய்யா விருதும் பெற்றுள்ளார். டெல்லியில் நவம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ள குழந்தைகள் தின விழாவின்போது கமலவேலனுக்கு பாலசாகித்ய புரஸ்கார் விருது வழங்கப்பட உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications