பேட்டரியால் இயங்கும் மாருதி கார்கள்: காமன்வெல்த் போட்டிக் குழுவிடம் ஒப்படைப்பு

மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஷின்சோ நகாநிஷி இந்தக் கார்களை டெல்லியில் நடைபெற்ற விழாவில், டெல்லி மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் அரவிந்தர் சிங்கிடம் இன்று ஒப்படைத்தார்.
இதுபோன்று 14 கார்கள் காமன்வெல்த் விளையாட்டு அமைப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. இதில் 10 எஸ்எக்ஸ் ஹைபிரிட் மற்றும் 4 மாருதி சுசூகி எகோ சார்ஜ் ரக கார்கள் அடங்கும். தற்போது 2 கார்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் ஷின்சோ நகாநிஷி பேசுகையில், "எதிர்கால சந்ததியினர் பயன்படுத்தும் வகையில் மாருதி சுசூகி நிறுவனத்தின் பொறியாளர்கள் இந்த சிறப்பு ரக கார்களை வடிவமைத்துள்ளனர். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆட்டோமொபைல் துறையில் பசுமைத் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க முயலும் தில்லி அரசின் முயற்சியைநாங்கள் பாராட்டுகிறோம். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக கார்களை தயாரித்துஅளிப்பதில் மாருதி சுசூகி மகிழ்ச்சி அடைகிறது'' என்றார் அவர்.
மாருதி சுசூகி நிறுவனத்தின் 25 பேர் அடங்கிய பொறியாளர்கள் குழு இந்த எஸ்எக்ஸ்4 ஹைபிரிட் கார் மற்றும் எக்கோ சார்ஜ் ரக கார்களை உருவாக்கியுள்ளது.
இதி்ல் எஸ்எக்ஸ்4 ஹைரிபிர்ட் கார் 1.2 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோலி என்ஜின், 50 கிலோவாட் மின் மோட்டாரருடன் வெளிவந்துள்ளது. எரிபொருளை சிக்கனமாக செலவழிக்கும் திறன் கொண்டது. பெட்ரோலிலும் இயங்கும், பேட்டரியிலும் இயங்கக் கூடியது. சுற்றுச் சூழலைக் கருத்தில் கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது.
எகோ சார்ஜ் ரக கார்கள் முழுவதும் பேட்டரியால் இயங்கக் கூடியவை. 50 கிலோவாட் மோட்டார், லித்தியம் அயன் பேட்டரியுடன் இவை வெளி வந்துள்ளன. ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை ஓட்டிச் செல்லலாம்.
மேலும் அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும். வீடுகளில் உள்ள மின் இணைப்பைக் கொண்டே இதை சார்ஜ் செய்துவிட முடியும். செலவும் மிகக் குறைவு. எபிபொருள் பயன்படுத்தப்படாததால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
அதிக வேகம் விரும்புகிறவர்களுக்காகவே 'ஸ்போர்ட் மோட்' என்ற வசதியும் இதில் உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications