மேலும் 500 நலிவடைந்த கலைஞர்களுக்கு நிதியுதவி
சென்னை: நிதியுதவி பெறத் தகுதிவாய்ந்த மேலும் 500 நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ. 1000 நிதியுதவி வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கலை வளர்ச்சிக்குத் தொண்டு புரிவதையே தமது வாழ்வியல் கடமையாகக் கொண்டு வாழும் கலைஞர்கள், வயது முதுமை காரணமாகத் தொழில் வாய்ப்புகள் குறைந்து அல்லல்படும் சூழ்நிலையைப் போக்கிட நலிந்த கலைஞர்களுக்கான நிதியுதவி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த நிதியுதவி மாதம் 500 ரூபாய் என்பதை, 2006க்குப்பின் மாதம் 1000 ரூபாய் என முதல்வர் கருணாநிதி உயர்த்தி வழங்கினார்.
அத்துடன், 2006 முதல் ஆண்டுக்கு 500 பேர் வீதம் கடந்த மூன்றாண்டுகளில் 1500 நலிந்த கலைஞர்களுக்குப் புதிதாக உதவித்தொகை வழங்கிட முதல்வர் கருணாநிதியால் அனுமதி வழங்கப்பட்டு, அவர்கள் மாதம் 1000 ரூபாய் வீதம் நிதியுதவி பெற்றுப் பயனடைந்து வருகிறார்கள்.
2009-2010ஆம் நிதியாண்டில், இத்திட்டத்தின்கீழ் மேலும் 500 நலிந்த கலைஞர்களுக்கு, 1.8.2009 முதல் மாதம் 1000 ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கிட முதல்வர் கருணாநிதி 24.9.2009 அன்று ஆணை பிறப்பித்திருந்தார். அந்த ஆணையின்படி, நிதியுதவி பெறத் தகுதிவாய்ந்த 500 நலிந்த கலைஞர்களைத் தேர்வு செய்து கருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார்.
இந்த ஆணையின் காரணமாக, அரசுக்கு ஆண்டொன்றுக்கு 60 லட்ச ருபாய் கூடுதலாகச் செல வாகும். தற்போது புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 500 நலிந்த கலைஞர்களையும் சேர்த்து, இத்திட்டத்தின்கீழ், மொத்தம் 7 ஆயிரத்து 391 பேர் பயனடைகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications