திருப்பாவை

Subscribe to Oneindia Tamil

திருப்பாவை

28. கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றுமில்லாத வாய்க்குலத்து உன்றன்னைப்
பிறவிப் பெருந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா, உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

பொருள்: கறவைப் பசுக்கள் கானகத்தை நோக்கி செல்கின்றன. அவற்றைப் பின் தொடர்ந்து சென்று நாங்கள் காடுகளிலே உண்டு திரிவோம். சற்றம் அறிவில்லாத இடையர் குலத்திலே நீ பிறந்ததற்கு நாங்கள் புண்ணியம் செய்து வைத்துள்ளோம்.

கறை ஏதும் இல்லாத கோவிந்தனே, உனக்கும், எங்களுக்கும் இடையிலான உறவு அழிக்க முடியாதது. அறியாத பிள்ளைகளாகிய நாங்கள், உன் மீது கொண்ட பேரன்பினால் உன்னைப் பெயரிட்டு அழைக்கிறோம். சிறு பெண்களான எங்களை கோபித்துக் கொள்ளாதே. மாறாக அருள் கொண்டு, நோன்பு நோற்க பறை தந்து அருள்வாயாக.

திருப்பள்ளியெழுச்சி

8. முந்திய முதல்நடு இறுதியு மானாய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும் எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே.

பொருள்: நீயே முதலும், நடு, இறுதியுமாவாய். உன்னை அந்த மும்மூர்த்திகளும் கூட அறிய மாட்டார்கள். அப்படி இருக்கையில் வேறு யாரால் உன்னை அறிய முடியும். பந்தினைக் கையில் கொண்டுள்ள உமையம்மையும், நீயும், உன் அடியவர்களது நெஞ்சங்களில் வாழும் மேன்மையானவர்கள்.

அருட்பெரும் ஜோதி வடிவில் மலையைக் காட்டி, திருப்பெருந்துறையில் கோவிலைக் காட்டி, வேதியன் உருவெடுத்து வந்தனே, உயிர்களுக்கெல்லாம் அருள் செய்வதையே கடமையாக கொண்டவனே திருப்பள்ளியிலிருந்து எழுவாயாக.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+