கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா: 27ம் தேதி துவக்கம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: இலங்கை, கச்சத்தீவில் புனித அந்தோணியார் கோயில் திருவிழா வருகிற பிப்ரவரி 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இப்பாரம்பரிய விழாவில் வழக்கமாக இந்தியா, இலங்கை மீனவர்கள் கலந்துகொண்டு வழிபடுவார்கள்.

கடந்த 1983ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்ததால், கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள மீனவர்களுக்கு இலங்கை அரசு தடை விதித்தது.

தற்போது இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்துவிட்டதால், கச்சத்தீவு திருவிழாவை மீண்டும் சிறப்பாக நடத்த அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

இதுதொடர்பாக யாழ்ப்பாணம் மறைமாவட்ட முதன்மை குரு ஞானப்பிரகாசம், சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசை மாணிக்கத்திற்கு அந்தோணியார் கோயில் விழாவில் கலந்துகொள்ள வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், ராமேசுவரம் பங்குத்தந்தை மைக்கேல்ராஜ் தலைமையில் மீனவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழாவையொட்டி 28ம் தேதி அதிகாலை திருப்பலி முடிந்தவுடன், புனித அந்தோணியாரின் தேர்ப்பவனி நடைபெற உள்ளது.

இவ்விழாவில் மீனவர்கள் கலந்துகொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மீனவர்கள் கச்சத் தீவு செல்வதற்குத் தேவையான வசதிகள் செய்து தரும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு பங்குத்தந்தை மைக்கேல்ராஜ் வேண்டுகோள் விடுத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+