இன்று திருவாரூர் 'ஆழித் தேரோட்டம்'-பக்தர்கள் குவிந்தனர்

திருவாரூர் தியாகராஜசாமி கோவிலின் ஆழித்தேர் தமிழகத்தில் உள்ள கோவில் தேர்களிலேயே மிகவும் பெரியதாகும். 90 அடி உயரமும் 300 டன் எடையும் உள்ள இந்த ஆழித் தேரோட்டம் இன்று காலை 7.27 மணிக்குத் தொடங்கியது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன், பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் ஆகியோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி சாந்தா தேரோட்டத்தில் கலந்து கொண்டார்.
தேரோட்டத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவாரூரில் குவிந்துள்ளனர்.
“ஆரூரா, தியாகேசா" என்ற பக்தி கோஷம் விண்ணைப் பிளக்க தேரோட்டம் நடந்தது. இந்தத் தேர் கீழ வீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக சென்று இன்று மாலை நிலையை அடையும்.
ஆழித்தேரை தொடர்ந்து அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர்கள் சென்றன. ஆழித் தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்துக்கு இன்று ஊள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதையொட்டி மிக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications