கர்கரேவை கொலை செய்தது யார்?-நூல் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
கர்கரேவை கொலை செய்தது யார் என்ற தலைப்பிலான நூல் அறிமுக விழா நாளை சென்னையில் நடைபெறுகிறது.
முன்னாள் மகாராஷ்டிர மாநில காவல்துறை ஐஜியான எஸ்.எம்.முஷ்ரிஃப் இந்த நூலை எழுதியுள்ளார். நூல் அறிமுகத்தோடு, ஆசிரியருக்கான பாராட்டு விழாவும் நடைபெறுகிறது.
ஈ.வி.கே. சம்பத் சாலை, பெரியார் திடலில் உள்ள எம்.ஆர். ராதா மண்டபத்தில் நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் விழாவில், தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வி.குமரேசன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
தி.க. தலைவர் கி.வீரமணி நூல் அறிமுக உரையாற்றுகிறார்.
சென்னை வேர்கள் வெளியீட்டகத்தின் எம். குலாம் முஹம்மத், பெங்களூர் தலித் வாய்ஸ் ஆசிரியர் வி.டி. இராஜசேகர் பாராட்டுரை நிகழ்த்துகின்றனர்.












Click it and Unblock the Notifications