துபாயில் அல்குரானில் அறிவியல் அத்தாட்சிகள் நூல் வெளியீடு
துபாய்: துபாய், அல்பராபஹாவில், பொறியாளர் அப்துல் காதர் என்ற ரஹ்மத் ராஜகுமாரன் எழுதிய அல் குரானில் அறிவியல் அத்தாட்சிகள் என்ற நூல் சக்கினா மஜ்லிஸில் சிறப்பாக வெளியிடப்பட்டது.
அமர்வுக்கு சமய நல்லிணக்க அறிஞர்,பொறியாளர் எம்.ஜே.எம்.இக்பால் தலைமை வகித்து பேசுகையில், எல்லா வேதங்களும் சிறப்பான விசயங்களையும்,மனித குலத்திற்கு தேவையான நல்வாழ்க்கை முறைகளயும் தருகின்றன.
திரு குரானில் வாழ்வியல் நெறிகள், சட்டங்கள், சமூகம், ஒழுக்கம், இவற்றோடு அறிவியலும் பின்னி பினைந்து இருப்பதை ஆய்ந்து நோக்கின் புரியவரும் என்று கூறினார்.
நூலின் ஆசிரியர் ரஹ்மத் ராஜாகுமாரன் புனித குரானை ஆய்ந்து படித்து இருப்பதால், பிரபஞ்சம், மாயை, இயற்கை, மரணம், மாத்தி யோசி என்ற லேட்டரல் திங்கிங் .. இப்படி பல பரிமானங்களில் சிறப்பாக எழுதியுள்ளதை சுட்டி காட்டி பேசினார்.
நெல்லை ஆணையர் திரு மோகனின் வாழ்த்துரையே இந்த நூலின் அருமையினை காட்டுவதாக இக்பால் சுட்டி காட்டினார்.
நூலை தொழில் நிர்வாகி அப்துல் ரவூஃப் வெளியிட ,கணனி மேலாளர் நிர்வாகி சுல்தான் காதர் ,பொறியாளர்கள் யூசுஃப்,புகாரி,சந்திர சேகர் பெற்று கொண்டனர்.
அறிவியல் நிபுணர் காயல் அபூபக்கர்,திட்டமிடல் மேலாளர் இம்தியாஸ்,திருச்சி பீர் மைதீன் ஆகியோர் ஆசிரியர் ரஹ்மத் ராஜகுமாரனை பாரட்டி பேசினர். அன்வர் நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications