பங்குனி உத்திரம் - இன்று பழனியில் தேரோட்டம்
பழனி முருகன் தலங்களின் முக்கிய விழாவான பங்குனி உத்திரம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பழனியில் இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 23ம் தேதி தொடங்கியது. நேற்று முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.
பங்குனி உத்திரமான இன்று அதிகாலை நாலரை மணிக்கு சுவாமி தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். 6 மணிக்கு தீர்த்தம் வழங்கல் நடைபெற்றது.
பின்னர் தந்தப் பல்லக்கில் திருவாவினன்குடியில் சுவாமி எழுந்தருளல் நடைபெற்றது.
இன்று பிற்பகல் 12 மணி முதல் 12.45 மணிக்குள் சுவாமி தேரில் எழுந்தருளல் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறும். இரவு 9 மணிக்கு தேர்க்கால் பார்க்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
தேரோட்டத்தையொட்டி பழனியில் பக்தர்கள் பெருமளவில் குவிந்துள்ளனர். கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக் காவடிகளுடன் பாதயாத்திரையாக பழனி வந்த வண்ணம் உள்ளனர்.
பழனி கோவில் கிரி வீதிகள், திருஆவினன்குடி, பெரிய நாயகி அம்மன் கோவிலில் பக்தர்கள் திடும், நகார், கொம்பு உள்ளிட்ட இசைக்கருவிகள் விண்ணதிர முழங்க, பக்தி பரவசத்துடன் காவடியாட்டம் ஆடி மகிழ்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications