கருவூரார் கோயில் கும்பாபிஷேகம்: தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூரில் உள்ள கரூவூரார் சித்தர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடந்தது.
கரூரில் 18 சித்தர்களில் புகழ் பெற்ற சித்தரான கருவூரார் சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் ரூபாய் 50 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்த கோயிலின் திருப்பணி வேலைகள் மற்றும் கட்டுமான பணிகள் குறித்த கலந்தாலோசனை கூட்டம் கரூர் பசுபதீஸ்வர் கோயிலில் உள்ள சோழர் மண்டபத்தில் நடைபெற்றது.
திருப்பணி வேலைகள் தொடங்குவதற்கான முற்றோதல் முடிந்து, தனியாக கோசாலை கட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் கருவூர் சித்தர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என். நேரு, மற்றும் இந்து சமய நலத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications