மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பவளப்பாறைகள் வளர்ச்சி அதிகரிப்பு

மன்னார் வளைகுடா கடல் உயிர்கோள பகுதியை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது குறித்து நெல்லை மற்றும் விருதுநகர் மண்டலங்களை சேர்ந்த வனத்துறை அதிகாரிக்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது.
தமிழக பல்லுயிர் பெருக்க வன உயிரின பாதுகாவலர் குணசேகரன தலைமை வகித்தார். கூட்டத்தில் அவர் பேசுகையில்,
'மன்னார் வளைகுடா கடல் பகுதியை பாதுகாப்பது மட்டுமல்ல அதை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
கடலோர மீனவ மக்களின் ஆதரவோடு மன்னார் வளைகுடா கடல் உயிர்கோள பகுதி பாதுகாப்பு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
225 கடலோர கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழுக்களுக்கு சுமார் 5 கோடி ரூபாய் சுழல் நிதியாக வழங்கப்பட்டு மீனவ மக்கள் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நாட்டில் முதல் முறையாக பவள பாறைகள் மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் மன்னர் வளைகுடா கடல் பகுதியில் உள்ள 6 தீவுகளில் செயற்கை முறையில் பவளப்பாறைகள் வளர்க்கப்பட்ட வருகிறது.
கடந்த ஒராண்டுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பவளப்பாறை மறுசீரமைப்பு திட்டம் வெற்றி பெற்றுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள சுகந்தி தேசதாசன் கடல் ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் மன்னார் வளைகுடாவில் தூத்துக்குடி பகுதியில் உள்ள வான்தீவு, காசுவார் தீவு, கரிய சல்லித்தீவு, விலாங்கு சல்லி தீவு, மண்டபம் பகுதியில் உள்ள சிங்கிள் தீவு மற்றும் பூமரிச்சான் தீவு ஆகிய 6 தீவுகளில் பவளப்பாறை மறு சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது' என்றார்.












Click it and Unblock the Notifications