மரங்கள் வெட்டப்பட்டதால் பொலிவிழந்த குற்றாலம் நீச்சல்குளம்
இயற்கை எழில் கொஞ்சும் பசுமை பூமி, கண்ணுக்கு விருந்தளிக்கும் மலை முகடுகள், அதன்மீது தள்ளாடி தவழ்ந்து வரும் கருமேகங்கள், ஓடி விளையாடும் சாரல் மழை துளிகள், ஆண்டில் 9 மாதங்களும் துள்ளி வரும் வெள்ளியருவி என புதிதாக மணமான பெண் போல பூத்துக்குலுங்குகிறது குளுகுளு குற்றாலம்.
குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் முதல் 30 லட்சம் வரை. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம், ஐயப்ப பக்தர்களின் கூட்டம் என ஆண்டுக்கு பல லட்சம் மக்கள் வந்து செல்லும் பகுதி.
ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் செலவில் அரசு வளர்ச்சி திட்டங்களையும், நிதியையும் கொட்டி குவித்து வரும் இங்கு எப்போதும் கண்கெட்ட பின்பே சூரியநமஸ்காரம் என்பார்களே அது போலதான் வளர்ச்சி பணிகளும், அரசு திட்டங்களும் (மழைக் காலத்தில்) நடைபெரும்.
தற்போதும் இதே நிலைதான் குற்றாலத்தில் உள்ளது. அதிமுக ஆட்சியின் போது இங்கு வரும் உல்லாச பயணிகளை உற்சாகப்படுத்தும் விதமாக சிறுவர் பூங்கா, மிருக காட்சி சாலை, நீச்சல்குளம், மீன்பண்ணை போன்றவைகள் அமைக்கப்பட்டன.
ஆனால் இன்று இவை மூன்றும் மகா மோசமான நிலையில் உள்ளன. இவை மூன்றும் முற்றிலும் வீணாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்பு நீச்சல் குளத்தில் வெயில் என்பதையே காணமுடியாத அளவுக்கு ஏராளமான மரங்கள் அடர்த்தியாக இருந்தன. ஆனால் பேரூராட்சி நிர்வாகம் திடீரென நீச்சல் குளத்தில் இருந்த சில மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளது.
சமீபத்தில் குற்றாலம் வந்த மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து அதிகாரிகளிடம் கோபம் காட்டியுள்ளார். மரம் வெட்டிய நபர்களை எச்சரித்துள்ளார். அத்தோடு முடிந்தது, நடவடிக்கை இல்லை.
நீச்சல்குளம் தண்ணீர் இன்றியும், மரங்களின் நிழல் இன்றியும், மேற்கூரை இன்றியும் தற்போத பரிதாபத்தோடு பூட்டப்பட்டு கிடக்கிறது. பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொதுமக்கள் பொழுதுபோக்குமிடம் தற்போது பராமரிப்பின்றி பொலிவிழந்து படு மோசமானநிலையில் உள்ளது, சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!













Click it and Unblock the Notifications