ரியாத்தில் பைந்தமிழ் பாவாணர் விழா நடந்தது
Subscribe to Oneindia Tamil
ரியாத்: ரியாத்தில் 'வளைகுடா செந்தமிழ்ச் சங்கம்' சார்பில் பைந்தமிழ்ப் பாவாணர் விழா நடந்தது.
கடந்த மாதம் 26ம் தேதி நடந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டனர்.
பல்வேறு விளையாட்டு போட்டிகள், வார்த்தை விளையாட்டுகள், கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடந்தன.
பாவாணர் அவர்களின் உற்ற நண்பரான புலவர் அரங்கராசர் பைந்தமிழ்ப் பாவாணர் குறித்த செய்திகளைத் தொகுத்துச் சிறப்பு சொற்பொழி ஆற்றினார்.
'நமது உதவி' என்ற அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் சமுதாய உதவிப்பணிகள் குழுவினர், மயிலாடுதுறையில் உள்ள 'கார்த்திகா ஆசிரமக்' குழந்தைகளுக்கு துணிமணிகள் அனுப்பிவைத்தனர்.
இறுதியாய் 'நிலாச்சோறு' உடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.













Click it and Unblock the Notifications