செல்போன் புகைப்படக் கண்காட்சி
மதுரை: இந்தியாவில் முதல்முறையாக செல்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் கண்காட்சி மதுரையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் ஜெய்ஹிந்த்புரம் கிளை நிர்வாகிகளில் ஒருவரான ஜெ. சரவணாச்சாரி புகழ் பெற்ற ஓவியர்.
இவர், மாற்றுத் திறனுடையோர் பங்கேற்கும் ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு சர்வதேச விருதைப் பெற்றவர்.
இவர் செல்போனில் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி துவக்க விழா மதுரை காந்தி மியூசியத்தில் இன்று காலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், காந்தி மியூசியம் செயலாளர் இரா. ரங்கசாமி, அகில இந்திய வழக்கறிஞர் சங்க செயலாளர் சாமித்துரை, மற்றும் ராஜகுமாரி ஜீவகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், கவிஞர் ப.கவிதா குமாரும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.
இந்த கண்காட்சி நாளையும் (ஏப்ரல் 4) நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications
