ரேஷனில் துவரம்பருப்பு கிடைக்கவில்லையா? புகார் செய்யலாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:​ ரேஷன் கடைகளில் மலிவு விலை துவரம்பருப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், 044- 2859 2828,​ 2836 4858,​ 2835 1514 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பொதுவினியோக திட்டத்தின் கீழ் துவரம்பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.​

வெளிச்சந்தையில் மொத்தவிலை மற்றும் சில்லறை விலை குறைந்துள்ளதை அடுத்து,​​ முதல் ரக துவரம் பருப்பு கிலோ ரூ.​ 63,​ 2ம் ரக துவரம் பருப்பு ரூ.​ 58,​ கனடா வகை துவரம் பருப்பு ரூ.​ 48 என கடந்த ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் தொடங்கியது முதல் இதுவரை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 15 டன்,​​ கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் 137 டன் பருப்பும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு துவரம் பருப்பு விற்பனையில் ஏதாவது புகார்கள் இருந்தால் மாநில நுகர்வோர் சேவை மையத்திற்கு 28592828, 28364858, 28351514 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் க.ராஜாராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+