சொந்த கலாச்சாரத்தை மதிக்காத இந்தியர்கள்- ஹாலந்து நிபுணர்

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரால் தோற்றுவிக்கப்பட்டு பெங்களுரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அமைப்பு வாழும் கலை.
இந்த அமைப்பு சார்பில் பொது மக்களுக்கு யோகா, பிரணாயாமா, சுதர்சனசியா என்ற மூச்சுப் பயிற்சி மற்றும் இயற்கை வேளாண்மை ஆயுர்வேத மூலிகைகள் பற்றி போதிக்கப்பட்டுகின்றது. இந்த அமைப்பு, உலகம் முழுவதும் சுமார் 156 நாடுகளில் உள்ளது.
இந்த அமைப்பில் பயிற்சி பெற்ற நெதர்லாந்து நாட்டு பிரதிநிதி அலெக்சாண்டர் லுத்ரா, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கஷிகி ஆகியோர் தூத்துக்குடி மாவட்டத்தில் பாத யாத்திரையாகச் சென்று பொதுமக்களை சந்தித்து வருகின்றனர்.
ரவிசங்கரின் முதன்மை சீடராகவும் வாழும் கலை அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் திகழும் அலெக்சாண்டர் லுத்ரா கூறுகையில்,
நான் யோகா மற்றும் சுதர்சனசியா பயிற்சி ஆசிரியராக உள்ளேன்.
இந்தியாவின் கலாசாரம் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. இதன் பெருமையை உணர்ந்த ஐரோப்பிய கண்டத்தினர் இந்திய கலாசாரத்தை பின்பற்றத் தொடங்கி உள்ளனர். பலர் அசைவ உணவிலிருந்து சைவத்துக்கு மாறி வருகின்றனர். ஆனால், இந்தியாவில் இந்திய கலாசாரம் குறித்த விழிபபுணர்வு போதுமானதாக இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications