நெல்லையப்பர் கோவிலில் கோடி அர்ச்சனை துவக்கம்
நெல்லை: நெல்லையப்பர் கோவிலில் 25 ஆண்டுகளுக்கு பின்னர் திருப்பணி மன்றம் சார்பில் உலக நன்மை வேண்டி கோடி அர்ச்சனை நேற்று காலை துவங்கியது.
காந்திமதி அம்மன் சன்னதி முன் 70 சிவச்சாரியர்கள் அமர்ந்து குங்குமம், மஞ்சள் கயிறு சாற்றி அர்ச்சனை செய்தனர். காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் 20 நாட்கள் அர்ச்சனை நடக்கிறது.
ஒரு நாளைக்கு 5 லட்சம் அர்ச்சனை வீதம் 20 நாட்களில் கோடி அர்ச்சனை நடக்கிறது. 22ம் தேதியன்று அர்ச்சனை நிறைவடைகிறது. அன்று காலை அம்மனுக்கு 1008 சகஸ்ர கலச அபிஷேகம் நடக்கிறது.
இதையொட்டி சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாளுக்கு நேற்று காலை சிறப்பு வழிபாடு நடந்தது. 20 நாட்கள் நடைபெறும் இந்த கோடி அர்ச்சனையில் பொதுமக்கள் மற்றும் கட்டளைதாரர்கள் பங்கேற்கின்றனர்.
பொதுமக்கள் வழக்கம்போல் ரூ.4 செலுத்தி காந்திமதி அம்மன் மற்றும் மூலவர் உற்சவருக்கு நடைபெறும் கோடி அர்ச்சனையில் பங்கு பெறலாம்.
அம்பாள் சன்னதி கொடி மரம் அருகே கோடி அர்ச்சனைக்கான ஹோமங்கள் நடக்கிறது. ஹோமகுண்டங்களுக்கு தேவையான பொருட்களை பக்தர்கள் உபயமாக வழங்குகின்றனர்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications