முத்துக்குமார் முதலாமாண்டு நினைவு தினம் - நெடு நடைப் பயணம் தொடக்கம்
சென்னை: ஈழத் தமிழர்களைக் காக்கக் கோரி சென்னையில் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமாரின் முதலாமாண்டு நினைவு தினம் 29ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி தமிழ் மீட்பு தமிழர் மீட்பு என்ற பெயரில் நெடு நடைப் பயணம் நாளை தொடங்குகிறது.
தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணம் நாளை காலை 10 மணியளவில் கோடியக்கரையிலிருந்து புறப்படுகிறது.
நிகழ்ச்சிக்கு தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு தலைமை தாங்குகிறார்.
மேலும், ஈழத்தமிழர்க்காகத் தீக்குளித்த முத்துக்குமார் நினைவு நாளையொட்டி முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன் எனும் தலைப்பிலான நூலைத் தமிழ்த் தேசம் வெளியிடுகிறது.
நூலை வெளியிட்டும் பயணத்தை வாழ்த்தியும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் சிறப்புரையாற்றுகிறார்.
நடைப் பயணத்தின் நிறைவு நிகழ்ச்சி மார்ச் மாதம் 12ம் தேதி கும்பகோணத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications