நாளை முதல் மேட்டூப்பாளையம் முதல் குன்னூர் இடையே மலை ரயில் இயக்கம்
Subscribe to Oneindia Tamil
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம், குன்னூர் இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊட்டி மலை ரயில் போக்குவரத்து நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம பலத்த மழையும், வரலாறு காணாத நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். சாலைகள் பெருத்த சேதமடைந்தன. மேலும், மலை ரயில் பாதையும், மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து மேட்டுப்பாளையம் ஊட்டி இடையிலான மலை ரயில் போக்குவரத்து தடைபட்டிருந்தது. தற்போது ஊட்டி –குன்னூர் இடையில்தான் மலை ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது மேட்டுப்பாளையம், குன்னூர் இடையிலான மலை ரயில் பாதை சரி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை முதல் இந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications