சிவில் சர்வீஸ் பக்கம் திரும்பும் ஐடி பட்டதாரிகள்

தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டிருக்கும் மந்த நிலையால் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்டதாரிகள் அதிகளவில் யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மத்திய அரசின் குடிமைப் பணிகளில் சேர விண்ணப்பிக்க ஆரம்பித்துள்ளனர்.
ஐஎஃப்எஸ், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட 20க்கும் மேற்பட்ட உயர் பதவிகளுக்காக இந்திய குடிமைப்பணிகள் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்த தேர்வை இந்தியா முழுவதும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதி வருகிறார்கள்.
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400 அல்லது 500 காலி இடங்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு முன் எப்போதும் இல்லாத வகையில் 965 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், தகவல் தொழில்நுட்பதுறையில் ஏற்பட்டிருக்கும் மந்தநிலை காரணமாக இந்த ஆண்டு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்டதாரிகள் மாற்று வாய்ப்புகள் குறித்து சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
இதனால், பொறியில் பட்டதாரிகள் பலர் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள். தற்போது பணியில் உள்ளவர்கள் கூட தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.
இந்தாண்டு தமிழகத்தில் இத்தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டிவிடும் என கணிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications