ஓசூரில் முத்துக்குமார் நினைவுதின சுடரோட்டம்
Subscribe to Oneindia Tamil
ஓசூர்: ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிரிழந்த முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஓசூரில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் இன்று சுடரோட்டம் மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இன்று (வெள்ளிக்கிழமை) மாலை தமிழக எல்லையிலிருந்து தொடங்கப்படும், சுடரோட்டத்தை ரவீந்திரன் தொடங்கி வைக்கிறார். ஓசூர் ராம் நகரில் ஓட்டத்தை நிறைவு செய்யும் வகையில் சுடரை விசுவநாதன் பெற்றுக் கொள்கிறார்.
மாலை 6 மணியளவில் ராம் நகரில் நடக்கும் திறந்தவெளிக் கருத்தரங்கிற்கு தமிழக இளைஞர் முன்னணி அமைப்பாளர் சுப்பிரமணி தலைமை தாங்குகிறார்.
கட்சியின் மேற்கு மண்டல செயலாளர் கோ.மாரிமுத்து, 'முத்துக்குமார் ஈகமும் தமிழ்த்தேசிய இலக்கும்' என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.












Click it and Unblock the Notifications