'பத்மபூஷன்': மிக தாமதம், ரொம்ப சிறியது- சண்ணுலால் மிஸ்ரா கருத்து

பாரம்பரிய இந்துஸ்தானி இசையில் பாண்டித்யம் பெற்ற 73 வயது இசைக் கலைஞர் சண்ணுலால் மிஷ்ரா வாரனாசியில் உள்ள இவர், வட மாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றவர்.
உஸ்தாத் அப்துல்கனி கானின் ஆத்ம சிஷ்யரான இவரிடம் இந்துஸ்தானி சங்கீதம் கற்று பிரபலமானவர்கள் நிறைய பேர் உண்டு. பாலிவுட் சூப்பர்ஸ்டார் அபிதாப் உட்பட பல விஐபிக்கள் இவரின் தீவிர ரசிகர்கள்.
தற்போது 73 வயதான இவருக்கு, பத்ம பூஷன் விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது. விருது வழங்கப்பட்டது குறித்து பண்டிட் சண்ணுலால் மிஷ்ரா கூறுகையில்,
என்னிடம் படித்துவிட்டு சங்கீதத் துறையில் இருக்கும் ஏராளமானவர்கள் இந்த விருதை எப்போதோ வாங்கிவிட்டார்கள்.
ஆனால் இப்போது இந்த விருதை எனக்கு தருகிறார்கள். அதனால், இதை நான் என்னுடைய திறமைக்கு கிடைத்த விருதாக நினைக்கவில்லை.
மேலும், என் திறமைக்காக கொடுத்திருந்தாலும், இந்த விருது மிகச் சிறியது என்று தான் சொல்வேன். எது எப்படியோ, சமூகமும், அரசாங்கமும் ஒன்றை கொடுக்கிறது என்கிற போது அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான்.
நான் இந்த சமூகத்திடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. என் வாழ்நாள் முழுவதையும் நான் சங்கீதத்துக்காக மட்டுமே அர்ப்பணித்துவிட்டேன்.
எனவே எனக்கு விருது கிடைக்கும் என்றோ, கிடைக்காது என்ற எண்ணமோ எதுவும் எனக்குக் கிடையாது என்றார்.












Click it and Unblock the Notifications