உலக பாரம்பரிய சின்னமாக ஆதிச்சநல்லூரை அறிவிக்க கோரிக்கை
நெல்லை: உலக பாரம்பரிய சின்னங்களில் ஓன்றாக ஆதிச்சநல்லூரை ஏற்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாளையில் நடந்த தேசிய கருத்தரங்களில் வலியுறுத்தப்பட்டது.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் சென்னை பெரியார் ஈ.வெ.ராமசாமி-நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையத்தில் தமிழ்நாட்டு தொல்லியல் ஆய்வுகள், ஆதிச்சநல்லுர் சிறப்பும், எதிர்கால திட்டமும் என்ற தலைப்பில் 3 நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழா நடைபெற்றது.
அறக்கட்டளை தலைவர் ஆணைமுத்து தலைமை தாங்கினார். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனர் ஆய்வறிஞர் அரணமுறுவல் வரவேற்று பேசினார். தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நடன காசிநாதன் அறிமுக உரையாற்றினார்.
இதையொடடி அமைக்கப்பட்டு இருந்த அகழ்வாராய்ச்சி பொருட்கள் படக்கண்காட்சியை கவிஞர் சேதுராமன் திறந்து வைததார். தமிழ் பல்கலை கழக ஆட்சி குழு உறுப்பினர் பரமசிவன் வாழ்த்தி பேசினார்.
தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நடன காசிநாதன் கூறுகையில், தமிழகத்தில் இதுவரை 100 இடங்களில் அகழாய்வுகல் நடந்துள்ளன. அவற்றில் ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வுதான் தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், வாழ்க்கை முறைகளை வெளிக்கொண்டு வந்துள்ளன.
மொகாஞ்தாரா, ஹரப்பா நாகரீகத்துக்கு இணையானது ஆதிச்சநல்லூர் நாகரீகம். ஆதிச்சநல்லூர் மிகப் பெரிய வாணிக நகரமாக திகழந்துள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க ஆதிச்சநல்லூரை உலக வரைப்படத்தில் இடம் பெற செய்ய வேண்டும்.
ஆதிச்சநல்லூர், கொற்கை, காயல்பட்டிணம், சாயர்புரம் ஆகிய இடங்களில் நில அகழாய்வு மேற்கொள்ள வேண்டும். குமரி, காயல்பட்டிணம் ஆகிய இடங்களில் முழுமையான கடல் அகழாய்வு நடத்த வேண்டும்.
மேலும் இந்த இடங்களை சுற்றுலா தலமாகவும் அறிவிக்க வேண்டும் என்றார் நடன காசிநாதன்.
தமிழ் பல்கலை கழக ஆட்சி குழு உறுப்பினர் தொ.பரமசிவன் பேசுகையில்,
தாமிரபரணி ஆற்றங்கரையில் இரும்பை உருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கடையம், ஆழ்வார்குறிச்சி, அம்பை போன்ற மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளில் தொல்லியல் தடயங்கள் உள்ளன.
அதனை அகழாய்வு செய்ய நெல்லை மாவட்டத்துக்கு மட்டும் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆதிச்சநல்லூரில் தோண்டப்படாத பகுதிகளை மாநில தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications