துபாய்: மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் இந்திய சங்கத்தினர் சந்திப்பு

நிகழ்ச்சியினை இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா துவக்கி வைத்தார். மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் குறித்த அறிமுகவுரையினையும், இந்திய கன்சுலேட் ஆற்றி வரும் பணிகள் குறித்தும் விவரித்தார்.
இஸ்லாமிய வங்கி, சிறுபான்மையினர்கான கல்வி உதவி மற்றும் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து வினாக்களை அமைச்சரிடம் இந்திய சங்கப் பிரதிநிதிகள் கேட்டனர். அவற்றிற்கு அமைச்சர் சல்மான் குர்ஷித் பதிலளித்தார்.
நிகழ்ச்சியில் இந்திய சமூக நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குமார், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ.லியாக்கத் அலி, செயலாளர்கள் ஏ. முஹம்மது தாஹா, யஹ்யா முஹ்யித்தீன், ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், கேரள முஸ்லிம் கல்ச்சுரல் சென்டர், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம், இந்தியன் இஸ்லாமிக் சென்டர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள், சிறுபான்மையின பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications