7 வயது சிறுமி சம்பா நடனம் ஆட ரியோ கோர்ட் அனுமதி

Subscribe to Oneindia Tamil

Julia Lira
ரியோடி ஜெனீரோ: பிரேசில் நாட்டின் பாரம்பரிய விழாவான ரியோ கார்னிவல் நிகழ்ச்சியில் 7 வயதேயான ஜூலியா லிரா என்ற சிறுமி கவர்ச்சிமிகு சம்பா நடனம் ஆட பிரேசில் நாட்டு கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

பிரேசில் நாட்டின் பாரம்பரிய நடனம் சம்பா. கவர்ச்சிகரமான நடனம் இது. பல மணி நேரம் கூட தொடர்ந்து இந்த நடனத்தை அழகுப் பெண்கள் ஆடுவர்.

ரியோ கார்னிவல் நிகழ்ச்சியில் சிறப்பாக நடனம் ஆடும் பெண்ணைத் தேர்வு செய்து அவருக்கு சம்பா ராணி என்ற பட்டம் சூட்டப்படும்.

இந்த ஆண்டு நிகழ்ச்சியில் 7 வயதேயான ஜூலியாவும் ஆட முடிவு செய்தார். ஆனால் இதற்கு சிறார் உரிமை அமைப்பு ஒன்று எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தது.

சம்பா நடனம் ஆடும் அளவுக்கு இந்த சிறுமிக்கு வயது போதாது. மேலும் தொடர்ந்து பல மணி நேரம் ஆடினால் அவரது உடல் நலம் பாதிக்கப்படும். எனவே இதை அனுமதிக்கக் கூடாது என்று அந்த அமைப்பு கோரியது.

இதை விசாரித்த நீதிபதி, அந்தக் கோரிக்கையை நிராகரித்தார். சிறுமி ஜூலியா தாராளமாக சம்பா நடனம் ஆடலாம் என்று அறிவித்தார்.

இதுகுறித்து ஜூலியா சம்பா பயின்று வரும் பள்ளியின் கலை இயக்குநர் கூறுகையில், சிறுமி ஜூலியா சிறுமியாகவே இந்த நடனத்தை ஆடுவார். அவரை இளம் பெண் தோற்றத்திற்கு மாற்றும் எண்ணம் இல்லை. குழந்தைத்தனமான முகத்துடன், குழந்தையாகவே அவள் ஆடுவாள் என்றார்.

ஜூலியாவின் தந்தை மார்கோ லிரா கூறுகையில், எனது மகளின் உடல் நலம் குறித்து தேவையில்லாமல் மிகைப்படுத்திப் பேசுகிறார்கள். அவள் ஒரு முழுமையான டான்சர். அதில் எங்களுக்குச் சந்தேகம் இல்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+