நவதிருப்பதி கோயிலில் ரூ.6 கோடியில் வளர்ச்சி பணிகள்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி கோயில்களில் ரூ.6 கோடி செலவில் வளர்ச்சி பணிகள் செய்ய புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுலா துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து சுற்றுலாத்துறை இயக்குனர் மோகன்தாஸ் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கோ.பிரகாஷ் முன்னிலையில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.
அப்போது தூத்துக்குடி மாவட்டம் நவதிருப்பதி கோயில்களில் ரூ.6 கோடி செலவில் புதிய வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது மற்றும் பல்வேறு பணிகள் குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது மாவட்ட சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) அரிராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் குபேந்திரன், என்ஜினியர் ராஜகோபாலன், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் உள்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தூத்துக்குடி ரோச் பூங்காவில் ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் செலவில் செயல்படுத்தப்படுகிறத படகு குழாமை பார்வையிட்டு மாசுகட்டுபாட்டு தடையில்லா சான்று பெறுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து எட்டையாபுரத்தில் 45 லட்சம் செலவில் செயல்படுத்தப்பட உள்ள பணிகள் மற்றும் கடந்த ஆண்டு ஓதுக்கப்பட்ட நிதியில் செய்யப்பட்ட பணிகள், பாஞ்சாலக்குறிச்சியில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சி பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.












Click it and Unblock the Notifications