கங்கண சூரிய கிரகணத்தால் எந்தப் பாதிப்பும் இல்லை - ஐயம் பெருமாள்
கன்னியாகுமரி: கங்கண சூரிய கிரகணத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று பிரபல விஞ்ஞானி ஐயம்பெருமாள் தெரிவித்துள்ளார்.
கங்கண சூரிய கிரகணம் உலகம் முழுவதும் நேற்று முன்தினம் நிகழ்ந்தது. தமிழகத்தில் கன்னியாகுமரியில் சூரிய கிரகணம் பெருமளவு தெரிந்தது.
இந்த அரிய நிகழ்வை ஆய்வு செய்ய இந்தியா முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளும், 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் கன்னியாகுமரியில் குவிந்திருந்தனர்.
இவர்கள் சூரிய கிரகணத்தை 14ம் தேதியில் இருந்து நேற்றுவரை பல்வேறு ஆய்வுகளை நடத்தினர். இந்த நிலையில் சூரிய கிரகணத்தை ஓட்டி நடந்த 3 நாள் கருத்தரங்கின் நிறைவு விழா நேற்று கன்னியாகுமரியில் நடந்தது.
இதில் விஞ்ஞானி ஐயம்பெருமாள் பேசுகையில்,
சூரிய கிரகண நிகழ்வினால் இயற்கை மற்றும் தட்பவெட்ப நிலையில் ஏதேனும மாற்றம் ஏற்படுமா என்பது குறித்து 100 வி்ஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஓரே நேர்கோட்டில் வரும்போது அமாவாசை நிகழ்கிறது. இந்த அமாவாசையின் போது கடல் சீற்றம், கடல் நீர் மட்டம் ஏற்ற இறக்கம் போன்றவை ஏற்படும். ஆனால் நடந்து முடிந்த சூரிய கிரகணத்தால் எவ்வித இயற்கை மாற்றமும் ஏற்படவில்லை.
வரும் 2113ம் ஆண்டு நவம்பரில் இதே போன்று கிரகணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications