துபாயில் சுடர்வம்ச கலை நிகழ்ச்சி, நூல் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் சுடர்வம்சத்தின் கலை நிகழ்ச்சி மற்றும் நூல் வெளியீட்டு விழா வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது.

கராமா செண்டரில் வரும் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியில் செல்வி நிவேதிதா – மதர்ஸ் ஃபிரீஸ் குழுவினரின் நடன நிகழ்ச்சி, மியூசிக் லிங்ஸ் – சுரேஷ் மற்றும் அமீரகக் கலைஞர்கள் பங்கு பெறும் இசை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

சிறுகதை எழுத்தாளர் திருச்சி சையது எழுதிய, 'அன்பைத் தேடி' என்ற சிறுகதை தொகுப்பு நூலை இலங்கை தமிழ்ச்சங்க துணைத்தலைவர் காவியத்திலகம் ஜின்னாஹ் ஷரீபுத்தீன் வெளியிட்டு பேசுகிறார்.

தமிழக அரசின் ஓய்வுபெற்ற பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர் எம்.எஸ்.நெய்னா முஹம்மது அவர்களது வாழ்த்துரை, நகைச்சுவையாளர் மன்றத்தின் சுரேஷ் குழுவினர் வழங்கும் நகைச்சுவை நிகழ்ச்சி, கண்ணன் நடத்தும் வினாடி வினா நிகழ்ச்சி உள்ளிட்டவையும் இடம்பெற இருக்கின்றன.

மேலும் விவரங்கள் அறிய சுடர்வம்சத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் ரகுராஜை 050 2164375 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+