தமிழகம் முழுவதும் எலும்பு வங்கிகள் தொடங்கப்படும் - டாக்டர் மயில்வாகணன் நடராஜன்

Subscribe to Oneindia Tamil

TN to have Bone banks in all districts soon
தென்காசி: தமிழகம் முழுவதும் எலும்பு வங்கி துவங்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழக துணை வேந்தர் டாக்டர் மயில்வாகணன் நடராஜன் தெரிவித்தார்.

தமிழ்நாடு எலும்பு முறிவு சிகி்ச்சை நிபுணர்களின் மூன்று நாள் மாநாடு குற்றாலத்தில் நேற்று முன்தினம் துவங்கியது.

இரண்டாவது நாளான நேற்று தமிழ்நாடு எலும்பு முறிவு சிகி்ச்சை நிபுணர்கள் சங்கத்தின் மாநில தலைவர் நடேசன் தலைமை வகித்தார். விழா ஒருங்கிணைப்பு குழு தலைவர் டாக்டர் முருகேசன் வரவேற்றார். செயலாளர் நல்லி யுவராஜ் ஆண்டறிக்கை வாசித்தார்.

தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலை கழக துணை வேந்தர் மயில்வாகண நடராஜன் குத்துவிளக்கு ஏற்றி மாநாட்டை துவக்கி வைத்தார். நெல்லை மருத்துவ கல்லூரி முதல்வர் கனகராஜ், லாசர் சாண்டி புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநில தலைவர் ஜெயசங்கர் ஆகியோர் பேசினர்.

இதில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேலைநாடுகளை சேர்ந்த டாக்டர்கள் கலந்து கொண்டனர். மாநாடு ஒருங்கிணைப்பு செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

பின்னர் டாக்டர் மயில்வாகணன் நடராஜன் நிருபர்களிடையே பேசுகையில், எலும்பு வங்கி அமைப்பது குறித்து விழி்ப்புணர்வு ஏற்பட வேண்டும். தற்போது சென்னையில் அரசு சார்பிலும், கோவையில் தனியார் சார்பிலும் தலா ஒரு எலும்பு வங்கி இயங்கி வருகிறது.

20 முதல் 65 வரை வயதுள்ளவர்களிடம் எலும்பை எடுத்து பதப்படுத்தி பயனாளிகளுக்கு பொருத்தலாம். எலும்பு தானம் குறித்து டாக்டர்களிடமும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வு வேண்டும்.

தமிழகம் முழுவதும் எலும்பு வங்கி திறக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+