கன்னடம் பேசாவிட்டால்... அரசு ஊழியர்களுக்கு எடியூரப்பா எச்சரிக்கை
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட அரசு ஊழியர்கள் அனைவருக்கும் கட்டாயமாக கன்னட மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறினார்.
அரசாங்க நிர்வாக நடவடிக்கைகளில் கன்னடத்தை பயன்படுத்த மறுக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பெங்களூரில் கன்னட மேம்பாட்டு ஆணையம் சார்பில் அரசு ஊழியர்களுக்கான கன்னட பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.
திட்டத்தை தொடக்கி வைத்து பேசிய முதல்வர் எடியுரப்பா,
'அரசு நிர்வாகத்தில் கன்னட மொழியை பயன்படுத்துவதை கட்டாயமாக்கி பல முறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனால் எந்த பிரயோஜனமும் இல்லை.
ஆனால் இனிமேல், இந்த நிலையை அரசு சகித்துக் கொள்ளாது. கன்னடத்தை புறக்கணிக்கும் அதிகாரிகளின் அணுகுமுறையை இனிமேலும் அனுமதிக்க முடியாது.
எனவே, கன்னடம் பயன்படுத்தாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடு்க்க அரசு முடிவு செய்துள்ளது. கன்னடம் பயன்படுத்தாத அதிகாரிகளின் சர்வீஸ் ரெக்கார்டுகளில் இதுபற்றிய குறிப்புகள் தவறாமல் இடம் பெறும்' என்றார்.












Click it and Unblock the Notifications