துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் நான்காம் ஆண்டு விழா
இந்நிகழ்வில் தாயகத்திலிருந்து கவிஞர் பிறைசூடன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, இலக்கியச் சொற்பொழிவாளர் அம்பிகாபதி, சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா, நடிகர் இசையமைப்பாளர் கருணாஸ், கரகாட்டப் புகழ் சுரேஷ், விஜய் டிவி புகழ் கோவை சிறுமுகை ஷானவாஸ் மற்றும் விக்னேஷ் கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
செல்வி ஆனிஷாவின் குரலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய விழாவில் குழந்தைகள் நடனங்கள் செல்வி நிவேதிதா ஆனந்தன் மற்றும் செல்வி ஸ்வேதா குழுவினரால் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் அமைந்திருந்தன.
தமிழக நாட்டுப்புறக்கலைகளின் ஓர் அங்கமான கரகாட்டம் விழாவில் கலகலப்பூட்டியதுடன் கலைஞர் சுரேஷ் அவர்களின் திறமைக்கு அவைநிறைந்த கரகோஷங்களைப் பெற்றுத் தந்தது.
பலவித திறமைகளுக்கும் வாய்ப்பளிக்கும் விதமாக செல்வி நிவேதிதா ஆனந்தனின் வீணை அரங்கேற்றம், செல்வி ஸ்ரீவித்யா கிருஷ்ணகுமாரின் கீபோர்டு நிகழ்ச்சி, மற்றும் கணிதத்திற்கான எளியமுறை பயிற்சியும் மேடையில் நிகழ்த்தப்பட்டது.
சிறப்பு விருந்தினர்கள் வரிசையில் முதலாவதாக இயக்குனர் கௌதமன் தனது உரையில் சந்தனக்காடு தொலைக்காட்சித் தொடரை படம்பிடித்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் பற்றி எடுத்துரைத்ததுடன், அடுத்து அவர் கதாநாயகனாக நடித்து வெளிவரவிருக்கும் 'மகிழ்ச்சி" என்கிற திரைப்படத்திலிருந்து சிலகாட்சிகளை முதன் முதலாக பிரத்தியேகமாக அரங்கில் வெளியிட்டு நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தார். மேலும் வெளிநாட்டில் வாழ்வதை ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே வைத்துக் கொண்டு வாழ்வின் பெரும்பகுதியை குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கழிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
நடிகர், இசையமைப்பாளர் கருணாஸ் அரங்கைத் தன் வசப்படுத்தினார் என்றால் அது மிகையில்லை. தனது திரைத்துறை நுழைவுமுதல் இன்றையநிலையில் தயாரிப்பாளர் என உயர்ந்துள்ள பாதையைக் குறிப்பிட்டு, உழைப்பாளிகள் மனதில் நம்பிக்கையை வேருன்றியவிதம் உரையாற்றியது பாராட்டுக்குரியதாக இருந்தது. தனது தனிச்சிறப்பான கானா பாடல் ஒன்றையும் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
சன் குழுமத்தின் திரைப்படத் தயாரிப்பு பிரிவு தலைமை செயல் அலுவலர் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா உரையில் வானலை வளர்தமிழ் செய்துவரும் சாதனைகளைப் பாராட்டி இதற்கு முழுமையான பங்களிப்புதரும் சிவ்ஸ்டார் கோவிந்தராஜ் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் வானலை வளர்தமிழ் அமைப்பின் செயல்பாடுகள் தமிழ் ஊடக வாயிலாக பரிணமிக்க ஆவன செய்வதாக உறுதியளித்தார்.
விழாவில் பங்கேற்ற சொற்பொழிவாளர் அம்பிகாபதி – தமிழ் இலக்கியத்தின் சிறப்புகளையும் கம்பராமாயணத்திலிருந்து சில வரிகளையும் மேற்கோள்;காட்டி இன்னும் இவர் பேச மாட்டாரா என்னும் அளவில் காலத்தின் அருமை கருதி நிறைவுசெய்தார்.
'இலக்கிய மழை" பொழிய வந்திருந்த இருவரில் ஒருவராய் கவிஞர் நெல்லை ஜெயந்தா, அன்னையைப் பற்றிய கவிதையால் எல்லோர் உள்ளங்களையும் கவர்ந்தார். இருபது நூற்றாண்டுகளில் தமிழ் மொழியில் பிறந்த இலக்கியங்களை வரிசைப்படுத்தினார்.
விழாவில் பங்கேற்ற கவிஞர் பிறைசூடன் அவர்களது சிறப்புரையில் செந்தமிழ் மொழியின் வளம்பற்றி பதங்கள் சொல்லி, கவிதை என்பதன் கருப்பொருள் தந்து, பண்பாடு, கலாச்சாரம் இவைகளின் அடையாளமாய் விளங்கும் இலக்கியங்களின் சிறப்புகள் பற்றி தமிழரின் மேன்மைகளையும் கம்பனின் சொல்லாட்சிக்கு உதாரணங்கள் தந்தும் எடுத்துரைத்தார்.
சின்னத்திரையின்மூலம் அமோகவெற்றி பெற்ற கோவை ஷானவாஸ் மற்றும்.விக்னேஷ் கார்த்திக் ஆகியோர் வழங்கிய நகைச்சுவை மற்றும் பலகுரல் நிகழ்ச்சிகள் விழாவிற்கு மேலும் மெருகூட்டின.
மேலும், ஈடிஏ ஸ்டார் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் ஆயுள் காப்பீடு பற்றிய அறிவிப்பும் விளக்கமும் மேடையில் வழங்கப்பட்டது. கராமா மெடிக்கல் சென்டரின், 5.00 திர்ஹம்களுக்கு இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதிப்பதற்கான முகாம் விழா அரங்கத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டு, கணிசமான அளவில் மக்கள் பலனடைந்தார்கள். அத்துடன், மணிமேகலைப் பிரசுரம் அமைத்திருந்த புத்தகக் கண்காட்சியின் மூலமும் மக்கள் பயனடைந்தார்கள்.
விழாவில் தமிழ்த்தேர் ஆண்டுமலரை சிறப்பு அழைப்பாளர்களும், செல்வி நிவேதிதா பாடல் எழுதி இசைசேர்த்து உருவாக்கிய 'தமிழ்த்தேர்" பற்றிய பாடல் அடங்கிய குறுந்தகட்டை ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா அவர்களாலும், கவிஞர்கள் கந்தநாதன், ஒகளுர் நிலவன் மற்றும் இரஜகைநிலவன் ஆகியோர்தம் கவிதை நூல்களும் வெளியிடப்பட்டன. இறுதியாக, பரிசுக் கூப்பன் மூலம் தேர்ந்தேடுக்கப்பட்டோருக்கு பலவித பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய பம்பர் பரிசுகளாக கண்ட்ரி கிளப் சார்பாக வெளிநாடுகளிலுள்ள அவர்களின் விடுதிகளில் ஏதாவதொன்றில் 1 வார காலம் தங்கி ஓய்வெடுக்கக்கூடிய வகையில் ரூ.25,000 மற்றும் ரூ.40,000 மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவிற்கான ஏற்பாடுகளை கவிஞர்கள் சிம்மபாரதி, கீழைராஸா, ஆதிபழனி, முகவை முகில், ஆனந்தன், சங்கமம் கலையன்பன், லட்சுமிநாராயணன், மலைவேல் ஆகியோர் சிறப்புற செய்திருந்தனர்.
விழாவில் வரவேற்புரையை அமைப்பின் தலைவர் கோவிந்தராசு அவர்கள் வழங்க, நர்கீஸ் பானு மற்றும் ஜியாவுதீன் இவர்களுடன் கந்தநாதன் மற்றும் அனுசுயா கந்தநாதன் ஆகியோர் நிகழ்ச்சியை இனிதே தொகுத்து வழங்கினார்கள். நன்றியுரையை காவிரிமைந்தன் நல்க விழா நிறைவுக்கு வந்தது.
விழாவில் அமீரகத்தின் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் பங்கேற்றனர்.
தகவல்: ஜியாவுதீன், வானலைவளர்தமிழ் – தமிழ்த்தேர், துபாய்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications