106 மணி நேரம் கண் பிரிசோதனை - வேலூர் கண் டாக்டர் லிம்கா சாதனை
வேலூர்: வேலூரைச் சேர்ந்த டாக்டர் அ.முகமது சயி என்பவர் சுமார் 106 மணி நேரம் கண் பரிசோதனை செய்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
வேலூரை அடுத்த சத்துவாச்சாரி பகுதியில் கண் மருத்துவமனை நடத்தி வருபவர் முகமது சயி.
இவர் கடந்த ஏப்ரல் 25 ம் தேதி பகல் 11 மணிக்கு தனது சாதனை முயற்சியைத் தொடங்கினார்.
செம்மொழி மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 7 நாட்கள் கண் மற்றும் பல் மருத்துவமனை ஆலோசனை மற்றும் தொடர் சிகிச்சை முகாம் நடந்தது.
பொது மக்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், அரசியல் பிரமுகர்கள், காவல் துறையினர் என பலர் கண்களை பரி சோதனை செய்து ஆலோசனை வழங்கினார்.
தினமும் ஒரு வேளை உணவு மட்டும் உண்டு விழித்திருந்து விழி பரிசோதனை செய்தனர் முகமது சயி மற்றும் மருத்துவ குழுவினர்.
தொடர்ந்து 6 ஆயிரம் பேருக்கு கண் பரிசோதனை செய்து 106 மணி நேரத்தில் தனது சாதனையை நிறைவு செய்தார்.
இவரது நிகழ்வுகளை லிம்கா நிறுவன அலுவலகர் ஸ்மிதா ஜோசப் தொடர்ந்து பதிவு செய்துள்ளார். சாதனைக்கான சான்றிதழ் விரைவில் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications