லிபியாவில் மீட்பு பணி முடிந்து தூத்துக்குடி-கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கும்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: லிபியாவில் தவிக்கும் இந்திய தமிழர்களை மீ்ட்கும் பணி முடிந்ததும் தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என மத்திய கப்பல்துறை செயலாளர் மோகன்தாஸ் தெரிவித்தார்.

வ.உ. சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழகம் சார்பில் லேபர் காலனிக்கு மின் இணைப்பு வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு துறைமுக கழக தலைவர் பொறுப்பு சுப்பையா தலைமை வகித்தார். விழாவில் மத்திய கப்பல் துறை செயாளர் மோகன்தாஸ் கலந்து கொண்டு குடியிருப்புகளுக்கான மின்இணைப்புகளை துவங்கி வைத்தார். விழாவில் கலெக்டர் மகேஸ்வரன், துறைமுக செயலாளர் லோகநாதன், துறைமுக அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மத்திய கப்பல்துறை செயலாளர் மோகன்தாஸ் நிருபர்களிடம் கூறியதாவது,

தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு இயக்கப்படவுள்ள பயணிகள் கப்பல் லிபியாவில் உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களை மீட்கும் பணிக்காக சென்றுள்ளது. இந்த மீட்பு பணி தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பயணிகள் கப்பல் லிபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மீட்பு பணி முடிவடைந்தது்ம் தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+