துபாய் தமிழ்ச் சங்கம் நடத்திய காந்தி ஜெயந்தி விழா: நவம்பர் 4ல் 10-ம் ஆண்டு விழா

இந்த விழாவின் துவக்கமாக அமீரக தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. சிரியா மற்றும் விபீஷ் ஆகியோர் திருக்குறளை வாசித்து அதன் பொருளை விவரித்தனர். காந்தியடிகள் குறித்து சுப்ரஜாவும், பாரதியார் குறித்து வசந்த் ஆகியோர் சிற்றுரை ஆற்றினர்.
பொதுச்செயலாளர் சி. ஜெகந்நாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். இளவரசன் அவர்களின் மகள் வந்தவர்களை வரவேற்க நடனம் ஆடினார். சந்திரா குழுவினரின் கூட்டுப் பிரார்த்தனை இடம் பெற்றது.
அதனைத் தொடந்து நடன ஆசிரியை கவிதா பிரசன்னாவின் வடிவமைப்பில் சிறுவர் நடனம், பாடல் நிகழ்ச்சி, வினாடி வினா, புதிய உறுப்பினர் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் இளவரசன், டாக்டர் இளங்கோ உள்ளிட்டவர்களுக்கு பூங்கொத்துகளையும் வழங்கி கௌரவித்தார்.
கமிட்டி உறுப்பினர் விஜயேந்திரனின் நன்றியுரை மற்றும் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. நிகழ்ச்சிகளை மீரா கிரிவாசன் தொகுத்து வழங்கினார்.
வரும் நவம்பர் மாதம் 4-ம் தேதி துபாய் தமிழ்ச் சங்கம் 10-ம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கிறது. இதனையொட்டி பிரமாண்ட விழா நடத்தப்படவிருக்கிறது. அதில் திண்டுக்கல் ஐ. லியோனியின் பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதாக பொழுதுபோக்குத் துறை செயலாளர் ஏ. முஹம்மது தாஹா தெரிவித்தார். இதையொட்டி வெளியிடப்படும் சிறப்பு மலருக்காக உறுப்பினர்களின் படைப்புகள் வரவேற்கப்படுகின்றது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications