குவியும் வெளிநாட்டு பறவைகள்- வேடந்தாங்கல் சரணாலயம் நாளை திறப்பு

சென்னைக்கு அருகில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆண்டு தோறும் நவம்பர் முதல் மார்ச் வரை சீசன் காலம் என்பதால் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பறவைகள் இங்கு வந்து கூடுகட்டி இனவிருத்தி செய்து பின் அவைகளின் நாடுகளுக்கு திரும்புகின்றன. சீசன் காலத்தில் மரங்களில் கூடுகட்டியிருக்கும் பறவைகளைக்காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வேடந்தாங்களுக்கு வந்து செல்வது வாடிக்கை.
26 வகையான பறவைகள்
தற்போது வடகிழக்குப் பருவமழை நன்கு பெய்துள்ளதால் வேடந்தாங்களில் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இதனையடுத்து சைபீரியா, ஆஸ்திரேலியா, பர்மா, இலங்கை, கனடா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 26 வகையான வெளிநாட்டு பறவைகள் சரணாலயத்துக்கு வந்துள்ளன. இந்த பறவைகள் வேடந்தாங்கல் ஏரியில் உள்ள நீர்க்கடப்பை மரங்களில் கூடுகள் கட்டும் பணியில் இப்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இம்மாத இறுதிக்குள் பறவைகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கூடுகட்டும் பறவைகள்
நத்தைகுத்தி நாரை, கூழைக்கடா, சாம்பல்நாரை, பாம்புதாரா, வெட்டிவாயன், கரடிவாயன், வெள்ளை அரிவாள்மூக்கன், சிறியநீர்க்காகம், உள்ளிட்ட பல வகையான பறவைகள் ஆங்காங்காங்கே மரங்களில் தங்கி கூடுகட்டி வருகின்றன. இவை நவம்பர் மாத இறுதியில் குஞ்சுபொறிக்கத் தொடங்கும். மரத்திற்கு மரம் பறவைகள் தங்களின் குஞ்சுகளுக்கு இரை ஊட்டும் அழகை காண்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். குளிர்காலம் முடிந்து கோடை காலம் தொடங்கியவுடன் படிப்படியாக ஏரி நீர் வற்றத் தொடங்கும் அப்போது இந்த பறவைகள் தங்கள் குஞ்சுகளுடன் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பிவிடும்.
இந்த பறவைகளை காண தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வேடந்தாங்கலில் தற்போது பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பதற்காக வெள்ளிக்கிழமை முதல் பறவைகள் சரணாலயம் திறக்கப்படும் என்று வனச்சரகர் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications