சபரிமலையில் குவியும் பக்தர்கள் : தரிசன நேரம் 90 நிமிடம் நீட்டிப்பு
திருவனந்தபுரம்: சபரிமலையி்ல் கூட்ட நெரிசலை சமாளிக்க ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட தரிசன நேரம் நேற்று முதல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் 18 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.
கடந்த இருதினங்களுக்கு முன் பம்பையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஆந்திர பக்தர் ஒருவர் உயிர் இழந்தார், 20 பேர் காயமடைந்தனர். கடந்த ஆண்டுகளி்ல் இல்லாத அளவுக்கு பக்தர்கள் குவிந்து வருவதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே சபரிமலையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்போது நிலைமையை சமாளிக்க மேலும் 300 போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே பக்தர்கள் வசதிக்காக தரிசன நேரம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பிற்பகல் 1.30 மணிக்கு நடை சாத்தப்பட்டு 4 மணிக்கு திறக்கப்படும்.
பின் இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும். நெரிசல் அதிகரித்ததால் சமீபத்தில் 2 மணிக்கு நடை சாத்தப்பட்டும், இரவு 11.30 மணிக்கு நடை சாத்தப்பட்டும் வந்தது. நேற்று முதல் தரிசன நேரம் மேலும் நீட்டிக்கப்பட்டு பிற்பகல் 3 மணிக்கும், இரவு 12 மணிக்கும் நடை சாத்தப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications