திருப்பதி கோவில் விரைவு தரிசன டிக்கெட் நேரம் மாற்றம் : பக்தர்கள் மகிழ்ச்சி
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கான விரைவு (ஸ்பீட்) தரிசன டிக்கெட் வழங்கும் நேரம் முறைபடுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய வசதியாக ஸ்பீட் தரிசனம் என்ற பெயரில் விரைவு தரிசன டிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் விலை ரூ. 300. கோவில் நிர்வாகத்தின் இந்த முடிவு பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது.
இந்த விரைவு தரிசன டிக்கெட் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் எதிரில் உள்ள கவுண்டரில் வழங்கப்படுகிறது. ஆனால் டிக்கெட் வழங்கும் நேரம் முறையாக இல்லாமல் இருந்ததால் பக்தர்கள் சிரமப்பட்டனர். டிக்கெட் வாங்க பல மணி நேரம் காத்திருந்தனர். இதையடுத்து தேவஸ்தானம் விரைவு தரிசன டிக்கெட் வழங்கும் நேரத்தை மாற்றியுள்ளது.
அதன்படி சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் காலை 7 முதல் மாலை 6 மணி வரையிலும், இரவு 9 மணி முதல் ஏகாந்த சேவை வரையிலும் வழங்கப்படும். செவ்வாய்க்கிழமை காலை 8.30 முதல் மாலை 6.30 வரை, புதன்கிழமை காலை 9.30 முதல் 6.30 மணிவரையிலும், வியாழக்கிழமை காலை 9 முதல் மாலை 6 மணி வரையிலும், வெள்ளிக்கிழமை காலை 10 முதல் மாலை 6 மணி வரையிலும் விரைவு தரிசன டிக்கெட் வழங்கப்படும்.
தேவஸ்தானத்தின் இந்த அறிவிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் உண்டியல் மூலம் ரூ. 1. 58 கோடி வருமானம் வந்துள்ளது. மேலும், கடந்த 2 மாதங்களாக தினமும் உண்டியல் மூலம் ரூ. 1 கோடி வருமானம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications