மறைமலை இலக்குவனார் எழுதிய இந்திய இலக்கிய சிற்பிகள்

Subscribe to Oneindia Tamil

தமிழ் மீது பற்றும் தமிழின் பெருமையை உலகுக்கு உணர்த்த பல்வேறு நூல்களை எழுதியவருமான மறைமலை இலக்குவனார் இந்திய இலக்கிய சிற்பிகள் என்னும் நூலை எழுதியுள்ளார். இவரது பிற நூல்களைப் போல இந்த நூலும் தமிழ் இலக்கிய உலகில் வரவேற்பினை பெற்றுள்ளது.

இலக்கியத்துறையில் பெருமை

தமிழ்க் காப்புக் கழகம் மூலமும் 'சங்க இலக்கியம்", 'குறள் நெறி" , முதலான இதழ்களைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் நடத்தியும், தமிழ் மறுமலர்ச்சிக்கு ஊக்கம் தந்தவர் மறைமலை இலக்குவனார். இவருடைய 'தமிழ் உரிமைப் பெருநடைப்பயணம்' தமிழர் வரலாற்றில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. ஆங்கில அறிவின் திறத்தால் தமிழ் மேன்மையை உலகுக்குக் காட்டியவர். இவரது ஆய்வு நூல்கள் சிறந்த விளக்கங்களையும், கூறிய முடிவுகளையும் தமிழர்க்கு வழங்கின. இலக்குவனாரது தொல்காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு மிகச் சிறப்பானது.

தமிழறிஞர்கள் வாழ்த்து

'அரும்புலமையும் அஞ்சாமையும் சார்பற்ற நோக்கும் கொண்டவர் இவர்' என இலக்குவனாரைப்பற்றி அறிஞர் அண்ணா குறிப்பிட்டுள்ளார்.

நுண்மான் நுழைபுலமும் அஞ்சா நெஞ்சமும் இவரின் தனி அடையாளங்கள். ஆசிரியர் மறைமலை அடிகளாரின் பரந்தாழ்ந்த புலமையுடன். அறிஞர் கா.சு.பிள்ளையின் நுண்மான் நுழைபுல ஆய்வுத்திறனும், நாவலர் சோம சுந்தர பாரதியாரின் நிமிர்நடையும் துணிவும் உடையவர் இலக்குவனார் எனக் குறிப்பிட்டார் பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரை. வாழ்நாள் முழுமையும் தமில்காத்துத் தமிழ் வளர்க்கும் செந்தமிழ்க் காவலராகவே திகழ்ந்தார். இதன் காரணமாகவே இவருக்கு சிறந்த இலக்கிய நண்பர்கள் வட்டம் உருவானது.

திறனாய்வுத்துறையில் இலக்குவனார்

இந்திய இலக்கிய சிற்பிகள் நூலாசிரியர் மறைமலை இலக்குவனார் தமிழ்நாடு அரசின் கலைக்கல்லூரிகளில் 35 ஆண்டுகாலம் பணிபுரிந்தார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஓராண்டுகாலம் சிறப்புவருகை பேராசிரியராகப் பணி புரிந்த இவர் பல்துறைசார் அணுகுமுறைகள் வழி இலக்கியத்தை ஆய்வதில் பெரும் நாட்டமுடையவர். திறனாய்வுத் துறையில் இவர் பன்னிரண்டு நூல்கள் எழுதியுள்ளார். இவை அனைத்தும் இலக்கிய ஆய்வுப்புலத்தில் இவருக்குள்ள பேராவலை உணரவைக்கும்.

மறைமலை இலக்குவனாரின் புத்தகங்கள் சென்னை சாகித்திய அகாதெமியில் கிடைக்கின்றன. #443, குணா அடுக்ககம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600 018. என்ற முகவரியில் இலக்குவனாரின் புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+