செப்டம்பர் 29 முதல் ஹஜ் புனித யாத்திரை தொடக்கம்-தமிழ்நாடு ஹஜ் கமிட்டி
சென்னை: ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கான முதல் விமானம், இந்தியாவில் இருந்து வரும் 29ம் தேதி புறப்படும் என தமிழ்நாடு ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.
உலகமெங்கும் இருந்து ஆண்டுத்தோறும் லட்சக்கணக்கான முஸ்லீம்கள், ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். இந்தியாவில் இருந்து ஹஜ் செல்லும் யாத்ரீகர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகளை இந்திய ஹஜ் கமிட்டி செய்து வருகிறது. மேலும் தமிழக யாத்ரீகர்களுக்கான ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
இந்தாண்டு ஹஜ் பயணம் குறித்து இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவர் அபூபக்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, சென்னை வழியாக புதுசேரி, தமிழகம், அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 4,000 பேர் இந்தாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இவர்களுக்கான பயண ஏற்பாடுகளை தமிழ்நாடு ஹஜ் கமிட்டியினர் செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து ஹஜ் பயணத்திற்கான முதல் விமானம் வரும் 29ம் தேதி புறப்படும். கடைசி விமானம் அக்டோபர் 31ம் தேதி புறப்படும். அதன்பின் சவுதி அரேபியாவில் இருந்து நவம்பர் 11ல் முதல் விமானமும், டிசம்பர் 11ம் தேதி கடைசி விமானமும் புறப்படும்.
தமிழகத்தை பொறுத்தவரை ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் முதலில் ஜெட்டா செல்வர். பின்னர் அங்கிருந்து மெக்கா செல்வது வழக்கம். அதன்பின் மெதீனாவிற்கு சென்று 8 நாட்கள் தங்கியிருந்துவிட்டு, அங்கிருந்து சென்னை திரும்புகின்றனர்.
தமிழக பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து ஜெட்டாவிற்கு அக்டோபர் 17ம் தேதி முதல் விமானமும், அதே மாதம் 31ம் தேதி கடைசி விமானமும் இயக்கப்படும் புனித பயணம் முடித்து சென்னை திரும்புபவர்களின் வசதிக்காக, நவம்பர் 28ம் தேதி மெதீனாவில் இருந்து சென்னைக்கு முதல் விமானமும், டிசம்பர் 9ம் தேதி கடைசி விமானமும் இயக்கப்படும்.
இந்திய ஹஜ் குழு சார்பாக, இந்தாண்டு 1,25,000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர். அடுத்தாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் இப்போதே தங்கள் பாஸ்போர்ட்டை தயாராக வைத்திருக்க வேண்டும். பாஸ்போர்ட் காலாவதி நாள் 31.3.2013ல் முடிவுறாமலும் பார்த்த கொள்ள வேண்டும், என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications