திருப்பதியில் குவிந்த பக்தர்கள் கூட்டம் - இலவச தரிசனத்துக்கு 10 மணிநேரம் காத்திருப்பு
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் ரூ.73,000 மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு குவிந்ததால், இலவச தரிசனம் பெற வந்த பக்தர்கள் 10 மணிநேரம் வரை காத்திருந்தனர்.
மார்கழி மாதம் மற்றும் நேற்றுமுன்தினம் வார இறுதி நாள்(ஞாயிற்று கிழமை) என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
இதனால் திருப்பதியில் உள்ள தங்குவிடுதிகளில் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் அவதிப்பட்டனர். தங்குவிடுதிகளில் இடம் கிடைக்காத பக்தர்கள் கோவில் அருகே உள்ள பூங்காக்களிலும், சாலையோரங்களிலும் தங்கி ஓய்வெடுத்தனர்.
வைகுண்டம் வரிசையில் உள்ள 31 அடுக்குகளும் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. இதனால் இலவச தரிசனம் பெற வந்த பக்தர்கள் 10 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் பெற்றனர்.
மேலும் ரூ.50 மற்றும் ரூ.300 சிறப்பு தரிசனம் பெற வந்தவர்கள் 7 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் பெற்றனர்.
இலவச தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பாக இலவச உணவு, தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. வழக்கத்துக்கு அதிகமான கூட்டம் இருந்ததால் மகாலகு தரிசனத்திற்கு தேவஸ்தானம் ஏற்பாடு செய்து இருந்தது. நேற்றுமுன்தினம் மட்டும் சுமார் 73,000 பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
புத்தாண்டு, ஏகாதசி அன்று சிறப்பு தரிசனம்:
புத்தாண்டு(ஜனவரி 1ம் தேதி), ஏகாதசி(ஜனவரி 5ம் தேதி), துவாதசி(ஜனவரி 6ம் தேதி) உள்ளிட்ட நாட்களில் அதிகாலை 4 மணி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ஜனவரி 1ம் தேதி தரிசனத்திற்கு வரும் வி.ஐ.பி.க்கள் வரும் 25ம் தேதிக்குள் அவர்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று திருமலை - திருப்பதி தேவஸ்தான துணை அதிகாரி சீனவாசராஜூ தெரிவித்து உள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications