துபாயில் அல் பராஹா சக்கீனா மஜ்லிஸில் மீலாது நபி விழா கொண்டாட்டம்

கடந்த 18-ம் தேதி அல் பராஹா சக்கீனா மஜ்லிஸில் மீலாது நபி விழா நடந்தது. இந்த விழாவிற்கு மூன் தொலைக்காட்சி இஸ்லாமிய நிகழ்ச்சி அமைப்பாளர் பேராசிரியர் சுலைமான் மழ்ஹரி தலைமை தாங்கினார். ஹாஃபிழ் சையது இபுறாஹிம் நபி புகழ் பாடல்களை சிறப்புடன் பாடினார்.
சுலைமான் அவர்கள் தனது உரையில் நபிகள் நாயகம் சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும், சகிப்புத் தன்மையையும், மன்னிக்கும் குணத்தையும் போதித்துள்ளார்கள். அவர்களின் வாக்குகளையும்,வாழ்க்கையையும் பின்பற்றி வாழ்ந்தால் தனி மனிதனும், சமூகமும், உலகமும் முன்னேற்ற பாதையில் செல்லும் என்பதில் ஐயமில்லை என்று வரலாற்று ஆதாரங்களுடன் பேசினார்.
பின்னர் பேசிய எம்.ஜெ.எம். இக்பால் கூறியதாவது,
மனிதன் ஒருவருக்கு ஒருவர் கசப்பு உணர்வு இல்லாமல் உதவும் மனப்பான்மையோடு, மனித நேயம் பேணி, ஒற்றுமையுடன், தான் விரும்புவதையே மற்றவர்க்கும் விரும்பி, அண்டை வீட்டாருடன், சகோதர மத மக்களுடன் நல்லிணக்கம் பூண்டு வாழ்வதே நபிகள் நாயகம் வழியில் நடப்பதற்கு சிற்ந்த உதாரணம். இஸ்லாத்தில் தீவிரவாதம் அறவே இல்லை, மென்மையும், அன்புமே பிரதானம். மனிதர்களை ஒருவருக்கு ஒருவர் மனித நேயத்துடன், சகோதர உணர்வுகளுடன் வாழ்வதே நபிகள் நாயகத்திற்கு செய்யும் மாமரியாதை என்றார்.
தொடர்ந்து பேசிய கவிஞர் தேரிழை இம்தியாஸ்,பெருமானர் வாழ்க்கை அனைத்து நிலைகளிலும் மக்களால் பின் பற்றக் கூடியது. மார்க்கத்தில் கஷ்டங்கள், நிர்பந்தங்கள் என்பதே இல்லை.அவரவர் வழி அவரவர்கு. அவர் ந்பிகள் நாயகம் பற்றி காந்திஜி,பெர்னாட்ஷா, நெப்போலியன், மைக்கேல் ஹார்ட் ஆகியோரின் மேற்கோள்களையும் எடுத்துக் கூறினார்.
இதைத் தொடர்ந்து சுல்தான் அப்துல் காதர், சையது இப்றாஹிம், நசீம் ஆகியோரும் உரை நிகழ்த்தினார்கள். பீர் மைதீன் நன்றியுரை வாசித்தார். ஆலிம் ஹம்ஜா துவா ஓதினார்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அரபிக்கல்லூரி முதல்வர் அப்துல் காதர் மழ்ஹரி அவர்களை காயல் நற்பணிமன்ற தலைவர் வி.எஸ்.எம். அபுபக்கர் அவர்கள் வரவேற்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications