மலேசிய கோவிலில் நவராத்திரி விழா கொண்டாட்டம்: அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம்
பெராக்: மலேசியாவில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த மாதம் 27ம் தேதி முதல் கடந்த 6ம் தேதி வரை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
மலேசியாவின் பெராக் பகுதியில் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. அங்கு கடந்த மாதம் 27ம் தேதி முதல் கடந்த 6ம் தேதி வரை தொடர்ந்து தொடர்ந்து 10 நாட்களுக்கு நவராத்திரி விழா வெகு விமரிசையாக நடந்தது. 10 நாட்களும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள் நடந்தது.
ஒவ்வொரு நாளும் ஒரு குழந்தயை அம்மனாக பாவித்து பூஜை நடத்தப்பட்டது. அம்மனுக்கு மாரியம்மன், மீனாட்சி, மகாலட்சுமி, மகாகாளி, காமாட்சி, மஹிசாசுரமர்த்தினி உள்பட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டது. விழா நாட்களின் போது கர்நாடக இசைக்கச்சேரியும், பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது.
திருவிழாவின் இறுதி நாளான 6ம் தேதி அம்மன் மஹிசாசுரமர்த்தினி அலங்காரத்தில் சிம்மவாகனத்தில் எழுந்தருளி சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. சூரனை வதம் செய்த பிறகு அம்மனுக்கு சந்தனம், பாலாபிஷேகம் செய்யப்பட்டது. உக்கிரம் தணிந்த அம்மன் கோவிலுக்கு திரும்பி சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் பக்தர்களுக்கு மகாபிரசாதம் கொடுக்கப்ட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications