தூபாயில் அமானா அறக்கட்டளை நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

அறக்கட்டளை செயலாளர் எஸ்.எம். பந்தே நவாஸ், தகவல் தொழில் நுட்ப பொறுப்பாளர் முஹம்மத் ஜாவித், இணை செயலாளர் முஹம்மத் முகைதீன் ஆகியோர் தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். அறக்கட்டளையின் பொருளாளர் யாஸர் அஹமத், துணை தலைவர் இம்ரான் ஹுசைன் மற்றும் திருமண உதவிக்குழு பொறுப்பாளர் ரஃபீக் அஹமத், கல்வி உதவிக்குழு பொறுப்பாளர் சலீம் மாலீக், மருத்துவ உதவிக்குழு பொறுப்பாளர்கள் முகமது ஜலால், முஹம்மது ஹாரூன் ஆகியோர் நிகழச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
சென்னையி்ல் இருந்து வந்த சிறப்பு விருந்திரனான மௌலவி ஹாபீஸ் முஹம்மது இஸ்ஹாக் பிலாலி ஹஜ்ரத் அவர்கள் அமானா அறக்கட்டளையின் சேவையை பாராட்டிப் பேசியதுடன் அனைவருக்கும் கல்வி கிடைப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதின் அவசியத்தை எடுத்துரைத்தார்.
இறுதியாக அமானாவின் சேவைகளையும், எதிர்கால செயல் திட்டங்களையும் அறக்கட்டளை தலைவர் ஹாபீஸ் செய்யது அலி அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட அமானா அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். எஸ்.எம்.ஷேக் தாவூதின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.












Click it and Unblock the Notifications