காதல் கல்வெட்டுக்கள்
Subscribe to Oneindia Tamil

நிலத்தை கீறிக்கொண்டு
முளைக்கும் விதையைப் போல..
உனைக் கண்டதும்
என்னுள் காதல் முளைத்தது…
கரிசல் காட்டிலும்
கண்மாய் கரையோரமும்
வளர்ந்த நம் காதலுக்கு
எளந்தா ஊரணியும்
புளியமரத்து முனியாண்டியுமே
சாட்சிகள்….
காதலின் நினைவுகளை
கள்ளிச்செடியில்
பொறித்து வைத்தோம்
கல்வெட்டுக்களாய்….
சித்ரா பவுர்ணமியில்
சித்ரகுப்தன் கதை கேட்கையில்
யாருக்கும் தெரியாமல்
பொரிகடலை பரிமாறினோம்…
விடிய விடிய
கதை கேட்டும் தூங்காமல்
ஆற்றில் இறங்கும்
அழகரைக் காண
மாட்டுவண்டியில்
மதுரைக்கு பயணித்தோம்….
கள்ளழகர் சாட்சியாக
என் கை பிடித்த தருணங்கள்
இன்றும்
என் நினைவில் நிழலாடும்…
காலமாற்றத்தால்
திசைக் கொருவராய்
இடம் பெயர்ந்த பின்னும்…..
ஆண்டுதோறும்
வைகையில் இறங்கும்
அழகரை காண்கையில்….
என் தாகம் தீர்க்க
நீ வாங்கித்தந்த
ஜிகர்தண்டாவின் சுவை
நாவில் இனிக்கும்
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications